" ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக (நம்பிக்கையாளராக) இருந்து யார் நற்செயல்களைச் செய்வாரோ " (16:97)
கூலி வழங்குவதைப் பொருத்தவரை அல்லாஹ் ஆண் பெண் என்று அவர்களுக்கிடையில் வேற்று மைப்படுத்தவில்லை. அமல்கள் விஷயத்திலும் அவர்களை அல்லாஹ் வேறுபடுத்தவில்லை. அவ்விருவரும் சமமே.
அவர்கள் வேறுபடுவது எதிலெனில் ஒரு சில சட்டங்களில்தான். அவை பெண்களுக்கு ஏற்றதாக இருக்காது. ஏனென்றால், அல்லாஹ் இந்த உலக காரியங்களில் ஆண்களுக்கு ஏற்ற செயல்களையும் பண்புகளையும் அமைத்திருக்கிறான். அதேப்போல், பெண்களுக்கும் அவர்களுக்குரிய செயல்களை அமைத்திருக்கிறான்.
இந்த உலகில் பெண்களுக்கென்று உரிய (அமல்கள்ப் பற்றி) செயல்கள்ப்பற்றி ஆண்கள் பொறுப்பல்ல (அதாவது, இந்த துன்யாவில் பெண்களுக்கென்று குறிப்பிட்ட சில அமல்கள் கடைமையாக்கப்பட்டுள்ளது என்றால் அதை ஆண்கள் ஏன் செய்யவில்லை என்று அவர்களிடம் கேட்கப்படாது). அதுப்போன்று ஆண்களுக்கான செயல்கள்ப்பற்றி பெண்கள் பொறுப்பல்ல.
அனால், மறுமைக்கான அமல்களைப் பொறுத்தவரை இவ்விருவரும் ஒன்றுதான்.
" ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக (நம்பிக்கையாளராக) இருந்து யார் நற்செயல்களைச் செய்வாரோ " --"முஃமினாக (நம்பிக்கையாளராக) இருந்து" - முஃமினாக இருந்து என்கிற நிபந்தனையுடன் அமல்கள் செய்யவேண்டும்.
ஏனெனில், முனாஃபிக்கும்* (நயவஞ்சகனும்) அமல் செய்வான் ஆனால் அவன் அதை முஃமினாக இருந்து செய்யமாட்டான். *{முனாஃபிக் -- உள்ளதால் ஈமான்க் கொள்ளாமல் வெளிப்படையாகக் இஸ்லா மிய செயல்களை காட்டும் இரட்டை வேடம் போடுபவன் (வேஷதாரி)}
அவனுடைய (அமல்கள்) செயல்கள் நிராகரிக்கப்படும். மேலும், அவன் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில் இருப்பான். (பார்க்க ஸூரத்துன்னிசா: 145).
தங்களது அமல்களை காட்டுவதற்காகவே செய்வார்கள் (அல்லது செய்வது போன்று நடிப்பார்கள்).
(அல்லாஹ் கூறுகிறான்):
وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا
"அவர்கள் உங்களைச் சந்தித்தால்,'நாங்கள் விசுவாசிக்கிறோம் (ஈமான்க் கொள்கிறோம்) என்று கூறுகின்றனர்" (3:119)
தன் அமல்களில் போலியாக இருப்பார்கள். தொழுகை நோன்பு , அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ் என்று சாட்சியம் சொல்வது (போன்ற அனைத்திலும்). இவையெல்லாம் தன்னுடைய உயிரையும் உடமைகளையும் பாதுகாத்து மக்கள் மத்தியில் வாழ்வதர்க்காகத்தான் செய்வார்கள். எனினும் அவர்கள் உள்ளத்தால் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவில்லை.
இதன் காரணமாகத்தான் "முஃமினாக (நம்பிக்கையாளராக) இருந்து யார் நற்செயல்களைச் செய்வாரோ " என்பதை ஒரு நிபந்தனையாக ஆக்கி அல்லாஹ் கூறியுள்ளான்.
مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً
"ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக (நம்பிக்கையாளராக) இருந்து யார் நற்செயல்களைச் செய்வாரோ , நிச்சயமாக நாம் அவரை (இவ்வுலகில்) நல்ல வாழ்க்கையாகவாழச் செய்வோம்" (16:97)
இவை இந்த உலகத்தில் கிடைப்பவை. நல்லவிதமான, இனிமையான வாழ்க்கை. அமைதிபெற்ற உள்ளம். இதனால்தான் (அல்லாஹ்விற்கு) கீழ்படிந்து நடப்போர் மனிதர்களில் இன்பகரமான வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பதை காணலாம். மேலும் அவர்களின் நிலை சந்த்மானதாக இருக்கும். ஏனெனில், உண்மையான அமைதிபெற்ற நிலை என்பது உள்ளம் சாந்தமாக இருப்பதுதான். உடல் அல்ல. அவர்கள்தான் உள்ளதால் சுகவாசிகளாக இருப்போர்.
அவர்கள் அல்லாஹ்வை நினைவுகூறி வாழ்வார்கள். மேலும் மகத்துவமிக்க அல்லாஹ்வை நினைவுகூருவதில் மகிழ்ச்சி அடைவார்கள். மனோ இச்சைகளை கொண்டோ, சிற்றின்பங்களை கொண்டோ மகிழ்ச்சி அடையமாட்டார்கள். அதுதான் அவர்களின் இன்பங்களாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இவ்வுலகில் அவர்கள் மட்டும் எப்படி சாந்தமான, அமைதிபெற்ற மற்றும் இனிமையான நிலையை பெறுகிறார்கள் ? அல்லாஹ்வை வணங்குவதில், நினைவுகூருவதில் அவர்கள் எப்படி இன்பம் காண்கிறார்கள் ? இன்னோர் பக்கம் காஃபிர்கள் (நிராகரிப் பவர்கள்)-- அவரகளுக்கு இவ்வுலகம் முழுதும் கொடுக்கப்பட்டாலும் அதில் உள்ள இன்பங்கள் அனைத்தும் கொடுக்கபட்டாலும் அவர்கள் துர்பாக்கியம் நிறைந்தவர்களாகவும் துன்பமுற்றவர்களாவும்தான் இருப்பார்கள்.
இதற்க்குக் காரணம் அவர்களுடைய உள்ளங்கள் வெறுமையாக உள்ளன (பாழடைந்து உள்ளன). அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. மேலும், அவர்களின் முகங்கள் கருத்துவிட்டன. ஆனால், ஒரு முஃமினோ (ஈமான் கொண்டுள்ளவர்) இந்த துன்யாவில் நல்ல வாழ்க்கை வாழுகிறார். அது எப்படிப்பட்ட வாழ்க்கை என்றால் அது மகத்துவமிக்க அல்லாஹ்வை நினைவுக்கூருவது, அல்லாஹ் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வது, அல்லாஹ்விற்க்கு கீழ்படிவதில் இன்பமாக இருப்பது, இபாதத்துக்களில் அதிக ஈடுபாடுக்கொண்டிருப்பது போன் றவற்றின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கையாகும்.
இதனால்தான் ஒருவர் சொன்னார், " இந்த துன்யாவின் மக்கள் அதன் அதிகப்பட்ச சுவையை சுவைக்காமல் சென்றுவிட்டனர் ". அப்போது, "அதன் அதிகப்பட்ச சுவையை என்ன" என்று கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார், " ذكرُ الله عز وجل"மகத்துவமிக்க அல்லாஹ்வை நினைவுகூருவது"
இதுதான் இந்த துன்யாவின் அதிகபட்ச சுவை. இந்த அதிகபட்ச சுவையை சுவைக்காமல் அவர்கள் துன்யாவைவிட்டு செல்வார்கள். இது இழப்புதான். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.
No comments:
Post a Comment