(அல்லாஹ் கூறுகிறான்:)
فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةًநிச்சயமாக நாம் அவரை (இவ்வுலகில்) நல்ல வாழ்க்கையாகவாழச் செய்வோம்" (16:97)
(அதாவது) இந்த துன்யாவில் இபாதத்துகள் மூலமாக, திக்ர் (அல்லாஹ்வை நினைவுகூருவதன் வழி), மகத்துவமிக்க அல்லாஹ்விற்கு கீழ்படிவதன் மூலம் (அவர்களை நல்ல வாழ்க்கை வாழச்செய்வோம் என்று அல்லாஹ் கூறுகிறான்). மேலும் அமைதிபெற்ற நிலை, ஈமான், நூற் (ஒளி) போன்றவற்றைக்கொண்டும்.
மேலும் மறுமையில், وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ
"இன்னும், அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில் மிக அழகானதை நிச்சயமாக நாம் அவர்களுக்கு கூலியாகவும் கொடுப்போம்" (29:7)
அவர்கள் ஜன்னத்தில் (சொர்க்கத்தில்) நுழைவார்கள், அதில் அவர்கள் ஆனந்ததமாக இருப்பார்கள். அது நீடித்து இருக்கும் நிரந்தர இன்பம். இந்த உலகில் (இன்பங்கள்) துண்டிக்கப்பட்டதை போன்று மறுமையில் உள்ளவை துண்டிக்கபடாது. மேலும் அவர்கள் எந்த எதிரியையும், எந்த நோயையும் பயப்படமாட்டார்கள். இன ்னும், அவர்கள் மரணத்தையோ, வயது முதிர்ந்து போவதையோ, வறுமையையோ ஒருபோதும் பயப்படமாட்டார்கள். ( ஏனெனில் இவை ஜன்னத்தில் கிடையாது). மேலு ம், ஏதேனும் தேவைகளையோ அல்லது நிறைவேறாத ஆசைகளையோ அஞ்ச மாட்டார்கள். பாதுகாக்கப்பட்டவர்களாக (நிம்மதியாக) இருப்பார்கள்.
وَهُمْ فِي الْغُرُفَاتِ آمِنُونَ
" அவர்களோ (சுவனபதியிலுள்ள) உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் இருப்பார்கள்" (34:37)
ادْخُلُوهَا بِسَلَامٍ آمِنِينَ
(சொர்கவாசிகளிடம்,) "நீங்கள் சாந்தியுடன், அச்சமற்றவர்களாக அவற்றில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்) 15:46
وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ "இன்னும், அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில் மிக அழகானதை நிச்சயமாக நாம் அவர்களுக்கு கூலியாகவும் கொடுப்போம்" (29:7)
இதுதான் நல்ல வாழ்க்கை. எனினும், இந்த நல்ல, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது ஈமானை சார்ந்து இருக்கின்றது. மேலும், இதற்க்கு (இந்த நல்ல வாழ்க்கைக்கு), عِلْمٍ (சரியான அறிவு), بَصِيرَةٍ (தெளிவான ஆதா ரம்), صَبْر (பொறுமை), ثَبَات (உறுதியான நிலை) போன்றவைகள் அவசியமாக உள்ளன. இன்னும், இவைகள் மனிதனை அமைதிபெற செய்கின்றன. கடும் கஷ்டங்களிலும் குழப்பம் மற்றும் சோதைனைகளிலும் ஊசலாடிவிடக்கூடா து. மாறாக, மலையைப்போன்ற உறுதியுடன் இருக்க வேண்டும்.
அல்லாஹ் அவருக்கு (முஃமினுக்கு) அருட்கொடைகளை வழங்கினால் நன்றிசெலுத்துவார். அல்லாஹ் அவருக்கு கஷ்டத்தைக் கொடுத்து சோதித்தால் அவர் பொறுமையாக இருப்பார். இவர்தான் (உண்மையான) முஃமின் (அல்லாஹ் மீது நம்பிக்கைக்கொண்டவர்).
மேலும், மறுமையில் துண்டிக்கப்படாத நிலைத்திருக்கும் பேரின்பங்களும் அருட்கொடைகளும் அனைத்துவிதமான அச்சங்கள் மற்றும் துயரங்களை விட்டு பாதுகாப்பும் பெறுவார்கள். இன்னும், அவர்களின் உள்ளத்தில் உள்ள வெறுப்பு (குரோதம் போன்றவை) நீங்கி அவர்கள் சகோதரர்களாக இருப்பார்கள்.
وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ
" மேலும், (இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம்; (அவர்களும் உண்மையான) சகோதரர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கியவர்களாகக் (மஞ்சங்களில்) கட்டில்களில் (மகிழ்ச்சியுடையோராக சாய்ந்து) இருப்பார்கள். (15:47)
இப்படித்தான் சொர்கவாசிகளின் நிலை இருக்கும். இதுதான் நல்ல வாழ்க்கை. இதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை.
நீங்கள் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையயை விரும்புகிறீர்கள் என்றால் ஸாலிஹான அமல்கள் (நற்செயல்கள்) செய்யுங்கள். நீ ங்கள் உயிரோடு இவ்வுலக வாழ்கையில் இருக்கும் வரை, இவ்வுலகின் இச்சைகள், சிற்றின்பங்கள், பேராசைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தாதீர்கள். அவை உங்களை கவனமற்று இருக்கச்செய்துவிடக்கூடாது. மாறாக, மறுமையை பெறுவதற்கு (மறுமையை நோக்கிய பயணத்திற்கு) இந்த துன்யாவில் எவை உங்களுக்கு உதவுமோ அவற்றைப் பெற முயளுங்கள்.
இந்த துன்யா உங்களை பராக்காக்கிவிடக்கூடாது. அதுவே பெருங்கவலைக்குரிய ஒன்றாக ஆகக்கூடாது. இந்த துன்யாவில் உங்களுக்கு (தேவைக்குப்) போதுமானவைகளையும் தூயவனான அல்லாஹ்விற்க்கு கீழ்படிவதற்கு எவையெல்லாம் உங்களுக்கு உதவுமோ அவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், உங்களது நேரங்களையும் வாழ்வையும் ஸாலிஹான அமல்கள் செய்வதற்க்கு பயன்ப்படுதிக்கொள்ளுங்கள்.
மிக்க உயர்ந்தோனும் மகத்துவமிக்கவனுமா கிய அல்லாஹ் நமக்கு ரிஜ்க் (الرِّزْق) (வாழ்வாதாரம்) தேடுவதையும் ஏவி யுள்ளான். அதே சமயம் இபாதத் செய்வதையும் நம்மீது ஏவியுள்ளான் (கடமையாக்கியுள்ளான்).
அல்லாஹ் கூறுகிறான்,
فَابْتَغُوا عِندَ اللَّهِ الرِّزْقَ وَاعْبُدُوهُ وَاشْكُرُوا لَهُ ۖ إِلَيْهِ تُرْجَعُونَ
"ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே தேடுங்கள்;அவன் (அல்லாஹ்) ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள்; அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்" (29:17)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
"ஈமான் கொண்டவர்களே! (வெள்ளிக்கிழமையாகிய) ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அப்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன்பால் நீங்கள் சென்றுவிடுங்கள்; வர்த்தகத்தையும் (வியாபாரத்தையும்) விட்டுவிடுங்கள்; நீங்கள்அறிவீர்களாயின், இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் (பள்ளியிலிருந்து வெளியேரி) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக்கொள்ளுங்கள்; மேலும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுக கூறுங்கள்" (62: 9-10)
"ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால்" என்று அல்லாஹ் கூறுகிறான். அதாவது, (தொழுகைக்கான) அழைப்புக்கு முன்னர் கடைத்தெருக்களில், கடைகளில், பண்ணைகளில், அலுவலகங்களில் அல்லது வேறெங்கேனும் ரிஜ்க்கை (الرِّزْق) தேடுங்கள். பிறகு, முஅத்தின் (தொழுகைக்கு அழைப்புவிடுப்பவர்) அழைப்புவிடுத்தால், இந்த உலகின் வேலைகளை விட்டுவிட்டு (மஸ்ஜிதுக்கு) பள்ளிவாசலுக்கு ச ெல்லுங்கள்.
தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால், மஸ்ஜிதிலேயே அமர்ந்துக்கொண்டு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) ரிஜ்க் (الرِّزْق) தேடுவதை விட்டுவிடக்கூடாது.
"பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் (பள்ளியிலிருந்து வெளியேரி) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக்கொள்ளுங்கள்" அதாவது ரிஜ்க்கை (الرِّزْق) தேடுங்கள் (என்று அர்த்தம்).
"அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுக கூறுங்கள்"- அதாவது ரிஜ்க் தேடுவதென்பது அல்லாஹ்வை நினைவு கூருவதைவிட்டும் உங்களை கவனமின்றி ஆக்கிவிடக்கூடாது (மறந்து இருக்கச் செய்துவிடக்கூடாது). மாறாக, ரிஜ்கை தேடுங்கள் மேலும் தஸ்பீஹ்*, தஹ்லீல்*, தக்பீர்* போன்றவற்றி ன் மூலம் உங்களுடைய ரப்பை திக்ர் (ذِكْر) செய்யுங்கள் (நினைவு கூறுங்கள்).
[ *தஸ்பீஹ் - (சுப்ஹானல்லாஹ் என்று சொல்வது - அல்லாஹ்வை பரிசுத்தப்படுத்துவது - அதாவது அல்லாஹ் அனைத்துக் குறைகளையும்விட்டும் தூயவன், மிக்க உயர்ந்தோன் என கூறுவதாகும்]
[ *தஹ்லீல் - (லா இலாஹா இல்லல்லாஹ் என்று சொல்வது - வணக்கத்திற்க்குரிய தகுதியான இறைவன் அல்லாஹ் தவிர வேறில்லை என்று சொல்வது]
[ *தக்பீர் - (அல்லாஹு அக்பர் என்று சொல்வது - அல்லாஹ்வே மிகப் பெரியவன் என்று சொல்வது]
ஆக, (மேற்கூறிய வசனத்தில்) இரண்டு நல்ல விஷயங்கள் சேர்த்து காட்டப்பட்டுள்ளன. (ஆகிரத்தின் துன்யாவின் காரியமும் குறிப்பிடப்பட்டுள்ளன). இதற்கு காரணம், ஒரு முஸ்லிம் இந்த உலகத்திற்காகவும் உழைக்கிறார் மறுமைக்காகவும் உழை க்கிறார். ஆனால், அவர் தன்னுடைய உலக காரியங்கள் மறுமைக்கான செயல்களை செய்வதற்கு தடையாக இருப்பதை அனுமதிக்கக்கூடாது. அதேப்போன்று அவருடைய ஆகிரத்துக்கான செயல்கள் துன்யாவின் காரியங்களை செய்வதற்கு தடையாக இருக்காதவாறுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவ்விரண்டிற்கும் இடையே சமநிலையை மேற்க்கொள்ளவேண்டும். இதற்க்கென்று ஒரு நேரம் ஒதுக்கவேண்டும், அதற்க்கென்று ஒரு நேரம் ஒதுக்கவேண்டும்.
No comments:
Post a Comment