வேறொரு ஆயத்தில், மகத்துவமிக்கவனும் உயர்ந்தோனுமான அல்லாஹ் கூறுகிறான்,
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
"(விசுவாசிகளே, அறிந்து கொள்ளுங்கள்!) நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் - அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்"
யார் அவர்கள் ?
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
"அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வை உண்மையாகவே) விசுவாசித்து, (அவனைப்) பயந்தவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு. அல்லாஹ்வுடைய வார்த்தையில் (வாக்குகளில்) எவ்வித மாற்றமுமில்லை; இதுவே மகத்தான வெற்றியாகும்"
(10: 62-64)
இவர்கள்தான் அல்லாஹ்வின் அவ்லியாக்கள் (நல்லடியார்கள்). அவர்களுக்கு யாதொரு பயமும் இருக்காது. அதாவது, எதிர்வரும் மறுமையின் நிகழ்வுகளான கப்ரின்(மண்ணறையின் ) நிகழ்வுகள் அதன் பிறகு நடக்கும் காரியங்கள் போன்றவற்றைப் பற்றி அவர்களுக்கு யாதொரு பயமும் இருக்காது. இது அவர்களுக்கு உறுதி அளிக்கக்கூடியதாகவும், மனதிற்கு அமைதி தரக்கூடியதாகவும் இருக்கும்.
"அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்" - அதாவது, இந்த துன்யாவில் அவர்களை கடந்துச் சென்றுவிட்டவை கள் பற்றியோ, அல்லது அவர்கள் விட்டுச்சென்ற பிள்ளைகள் மற்றும் சந்ததிகளுக்கு ஏழ்மையை அஞ்சியோ அவர்கள் கவலை அடையமாட்டார்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்களுக்குப் பொறுப்பே ற்றுள்ளான்.
இந்த துன்யாவிலும் ஆகிரத்திலும் "அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்". யார் அவர்கள் ?
(ஏன் அவர்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்?) ஏனெனில், (அவர்கள் வாழ்கின்ற) இதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை. எந்த வாழ்க்கையில் பயமும் கவலையும் இல்லையோ அதுதான் மகிழ்ச்சியான இன்பமான வாழ்வு. அது எங்கு உள்ளது ?
அதனை அல்லாஹ் நமக்கு தன்னுடைய வார்த்தையில் தெளிவுப் படுதியு ள்ளான்,
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
"அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வை உண்மையாகவே) விசுவாசித்து, (அவனைப்) பயந்தவர்களாகவும் இருப்பார்கள்" (10:63)
எவருக்கு அல்லாஹ்வைப் பற்றிய ஈமானும் தக்வாவும் கொடுக்கப்பட்டுள்ளதோ (எவர் இவற்றைப் பெற்றிருக்கிறாரோ) அவர்தான் அல்லாஹ்வின் அவ்லியா (நல்லடியார்) ஆவார். அவர்கள் எத்தகையோரென்றால் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
மேலும், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனது மலக்குகள் மீதும், அவனது வேதங்கள் மீதும், அவனது தூதர்கள் மீதும், மறுமை நாள் மீதும், அல்லாஹ்வின் விதியின் மீதும் நம்பிக்கைக் (ஈமான்) கொள்வோராக இருப்பார்கள். நல் அமல்களும் செய்வார்கள். ஏனெனில், ஈமான் என்பது மொழிதல் (வார்த்தை), செயல் மற்றும் உறுதியான நம்பிக்கையாகும்.
(ஈமான் என்பது) நாவினால் மொழிந்து, உள்ளத்தால் உறுத்திக்கொண்டு உடல் உறுப்புக்களால் செயல்படுவது ஆகும். மேலும், (அல்லாஹ்விற்கு) கீல்படிதளின் மூலம் ஈமான் அதிகரிக்கும், மாறுசெய்வதின் காரணமாக அது குறையும். இதுதான் ஈமான்.
ஈமான் கொண்டோர் தங்களது உள்ளத்தில் இருக்கும் ஈமானின் அடிப்படையையும் தங்களது உடலில் வெளிப்படும் ஈமானின் அடிப்படையும் ஒருங்கிணைத்து இருப்பர்.
(எளிதாக சொல்வதானால்) அதாவது ஈமானையும் இஸ்லாமையும் ஒருங்கிணைத்து இருப்பர்.
இஸ்லாம் என்பது
- வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மத் [ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்] அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்றும் சாட்சியம் சொல்வது [லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மத் ரசூலுல்லாஹ் என்று சாட்சியம் சொல்வது ]
- தொழுகையை நிலைநாட்டுவது ,
- ஜகாத் கொடுப்பது ,
- ரமளான் மாதம் நோன்பு நோற்பது ,
- ஹஜ் செய்வது
இஸ்லாமிற்கும் ஈமானிறக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருப்பது இன்றியமையாத ஒன்று (அவை பிணைந்து இருப்பவை). இவர்கள்தான் الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
"அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வை உண்மையாகவே) விசுவாசித்து, தக்வா உடையவர்களாக இருப்பார்கள் (அவனை ப் பயந்தவர்களாகவும் இருப்பார்கள்)"
No comments:
Post a Comment