الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ"அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வை உண்மையாகவே) விசுவாசித்து, தக்வா உடையவர்களாக இருப்பார்கள் (அவனைப் பயந்தவர்களாகவும் இருப்பார்கள்)"
தக்வா உடையவர்களாக இருப்பார்கள் -- அதாவது, அல்லாஹ்வின் கோபத்தையும் தண்டனையையும் சம்பா திப்பதை விட்டு தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள் (ஒரு பாதுக்காப்பை ஏற்ப்படுத்திக்கொள்வார்கள்). (தக்வா என்கிற அரபு சொல்லுக்கு பாதுக்காப்பு என்று அர்த்தம்)
இது என்ன பாதுக்கப்பு ?
இரும்பு கேடையங்களா? அல்லது கோட்டைகளா? பாதுக்காப்பு வீரர்களா? அல்லது நல்ல ஆடைகளா? இல்லை. அந்த பாதுகாப்பு என்பது நல் அமல்கள்தான்.
وتقوى الله أن تعمل بطاعة الله على نورٍ من الله،ترجوا ثواب الله، وأن تترك معصية الله على نورٍ من الله، تخافُ من عقاب الله؛
அல்லாஹ்வின் மீது தக்வா கொள்வது என்பது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஒளியின் அடிப்படையில் அல்லாஹ்விற்க்கு கீழ்ப்படிந்து செயல்ப்பட்டு அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்ப்பார்த்து இருப்பதாகும். மேலும், அல்லாஹ் விடமிருந்து கிடைத்த ஒளியின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மாறுசெய்வதை (கீழ்படியாமல் இருப்பதை) விட்டு விட்டு அல்லாஹ்வின் தண்டனையை பயந்து இருப்பதாகும். இதுதான் தக்வா என்பதாகும்.
(அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஒளி - குர்ஆன் மற்றும் நபியின் சுன்னாவின் அடிப்படையில் செயல்படுவது).
அது ஏன் தக்வா என்று அழைக்கப்படுகின்றது என்றால், அது அல்லாஹ்வின் கோபத்தை விட்டும் தண்டனையை விட்டும் உங்களை பாது க்காகின்றது.
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ"அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வை உண்மையாகவே) விசுவாசித்து (ஈமான் கொண்டு), (அவனைப்) பயந்தவர்களாகவும் இருப்பார்கள்"
அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் ?
لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ"அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு" (10: 64)
மகத்துவமிக்கவனும் மிக்க உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் அவர்களுக்கு சுவர்க்கத்தைக்கொண்டும், நிரந் தர இன்பங்களைக் கொண்டும் நன்மாராயம் கூறுகிறான். "அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் நன்மாராயமுண்டு". பாருங்கள், இதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை. அவர்களுக்கு நன்மாரா யமுண்டு, அதாவது அவர்கள் நன்மாராயம் பெற்று, அதை எதிர்ப்பார்த்தவர்களாகவும், அல்லாஹ்வின் பேரருளின் காரணமாக ஆனந்தமடைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
"அல்லாஹ்வின் அருட்கொடையைக் கொண்டும், அருளைக் கொண்டும் இது வந்துள்ளதாகும். ஆகவே, அதைக்கொண்டு அவர்கள் சந்தோஷமடையட்டும்; இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றைவிட மிகச்சிறந்தது" என்று (நபியே) நீர் கூறுவீராக.
அல்லாஹ்வின் அருட்கொடையைக் கொண்டும் - அதாவது இஸ்லாமிய மார்கத்தைக் கொண்டும்
அருளைக் கொண்டும் - அதாவது அல்-குர்ஆனைக் கொண்டும்
இவற்றைக்கொண்டு அவர்கள் சந்தோஷமடையட்டும்; இது இந்த துன்யாவை விடச்சிறந்தது, இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றைவிட மிகச்சிறந்தது.
لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ
"அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு. அல்லாஹ்வுடைய வார்த்தையில் (வாக்குகளில்) எவ்வித மாற்றமுமில்லை"
மகத்துவமிக்கவனும் மிக்க உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் ஒன்றை சொன்னால் அது நடக்காமல் இருக்காது. எந்தவித மாற்றமும் இருக்காது. அல்லாஹ் سبحانه (பரிசுத்தமானவன்) ஒரு வாக்குறுதியை தந்துவிட்டால் அதை மாற்றிவிடவோ அல்லது வாக்கு மாறவோமாட்டான்.
வாக்குறுதியைப் பொறுத்தவரை மகத்துவமிக்க அல்லா ஹ் வாக்கு மாறமாட்டான். அல்லாஹ் ஒரு முஸ்லிமுக்கு ஜன்னத்தையும், நல்லவைகளையும் கொண்டு வாக்களித்திருக்கிறான் என்றால், மேலும் அந்த முஸ்லிம் அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகளை செய்து அவர் தீனில் உறுதியாக நிற்கிறாரெனில், நிச்சயமாக அல்லாஹ் வாக்கு மாறமாட்டான். அவருக்கு எதை வாக்களித்தானோ அதை கொடுப்பான்.
அதுவே, அல்லாஹ் ஒரு அச்சுறுத்தலைக் கொண்டு (தண்டனையைக் கொண்டு) எச்சரித்தால், பாவியாக இருக்கும் ஒரு முஸ்லிமை மன்னித்துவிடுவான் அல்லது அந்த எச்சரிக்கையை (தண்டனையை) நிறைவேற்றி அவருடைய பாவத்திற்காக அவரை தண்டிப்பான்.
அச்சுறுத்தலைப் பொறுத்தவரை, மகத்துவமிக்க அல்லா ஹ் அதனை நிறைவேற்றாமல் ஒரு முஃமினை மன்னித்துவிடலாம். ஷிர்க் (அல்லாஹ்விற்கு இணைவைப்பு) அல்லாது மற்றப் பாவங்கள் செய்துள்ள ஒரு பாவியை (அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்தவரை) அல்லாஹ் தன் தண்டனையைக் கொண்டு அச்சுறுத்தினால், அந்த அச்சுறுத்தலை (தண்டனையை) நிறைவேற்றாமல் அல்லாஹ் அவரை மன்னித்துவிடுவான். (இது அல்லாஹ்வின் மஷீயத் (நாட்டத்தை) சார்ந்தது).
மேலும், அவருடைய பாவச்செயல்களை அழித்துவிடுவான். அல்லாஹ்வின் பேரருள் மற்றும் கருணையின் காரணமாக இது அவருக்கு கிடைக்கும். (மேலும், தான் நாடினால் அவரை தண்டிப்பான்).
No comments:
Post a Comment