முடிவுரை
ஆகவே, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
அதிகாமான செல்வங்கள் இருப்பதைக் கொண்டோ அல்லது (ரிஜ்க்) (الرزق) வாழ்வாதாரங்கள் அதிகமாக இருப்பதைக் கொண்டோ , அல்லது பளிச்சென்ற வெளிப்புற தோற்றங்களை கொண்டோ மதிப்பிடக் கூடாத ஒன்று. மேலும், இச்சைகளைக்கொண்டும் இன்பங்களைக்கொண்டும் அதை அளவிடக்கூடாது.
அதிகாமான செல்வங்கள் இருப்பதைக் கொண்டோ அல்லது (ரிஜ்க்) (الرزق) வாழ்வாதாரங்கள் அதிகமாக இருப்பதைக் கொண்டோ , அல்லது பளிச்சென்ற வெளிப்புற தோற்றங்களை கொண்டோ மதிப்பிடக் கூடாத ஒன்று. மேலும், இச்சைகளைக்கொண்டும் இன்பங்களைக்கொண்டும் அதை அளவிடக்கூடாது.
மாறாக, மகிழ்ச்சியும் மகிழ்ச்சியான வாழ்வும் அல்லாஹ்வின் மீது உள்ள தக்வா, ஸாலிஹான அமல், நல்லவற்றை செய்வது போன்றவற்றுடன் தொடர்புடையனவாகும். மேலும், இந்த உலக வாழ்வில் எவையெல்லாம் நம்மை அல் லாஹ்விடம் நெருக்கமாக்கக் கூடிய காரியங்களாக இருக்குமோ அவற்றை செய்வதும் மகிழ்ச்சியான வாழ்க்கையுடன் தொடர்புடையதாகும்.
நிச்சயமாக (அல்லாஹ்வின்) வாக்குறுதி மிக அருகாமையில் உள்ளது. வாக்களிக்கப்பட்ட நேரம் நேரம் நெருங்கிவிட்டது. ஆகவே, இதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த உலக வாழ்க்கை நம்மை ஏமாற்றிவிடாமல் பார்த்துக்கொள்வது உங்கள் மீது கடைமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ
" நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி, உணமையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமற்றிவிடவேண்டாம்; ஏமாற்றுபவனும், அல்லாஹ்வைப்பற்றி உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்" (31:33)
(இந்த ஆயத்தில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ள) இவ்வுலக வாழ்க்கை என்பது நமக்கு தெரியும். ஆனால், இந்த ஏமாற்றுபவன் யார் ? அவன்தான் ஷய்தான், அல்லாஹ்வின் சாபம் அவன் மீது உண்டாகட்டும். அவன்தான் ஏமாற்றுபவன். ஆதமுடைய சந்ததிகள் ஏராளமானோரை ஏமாற்றுகிறான். அல்லாஹ்விற்கு கீழ்படிதலை விட்டும் அவர்களை பராக்காக்கிவிட்டு வஞ்சகம் செய்கிறான்.
ஆக, ஷய்தானின் ஊசாலட்டங்கள், தூண்டுதல், அவனது பொய்ப்பிரச்சாரம் (இன்னொரு அர்த்தம்: ஆட்டங்கான செய்தல்) போன்றவற்றினால் ஏமாந்துவிடாதீர் . இங்கு ஷய்தான் என்று சொல்லும்போது, ஜின்களில் உள்ளவற்றை மட்டும் குறிக்காது. மாறாக, மனிதர்களில் உள்ள ஷய்தான்களையும் குறிக்கும். அவர்கள்தான் மக்களை வழிகேட்டின் பக்கமும் கேடுகளின் பக்கமும் அழைப்போர். அவர்களை திரும்பியும் பார்க்காதீர்கள்.
மனிதர்கள் மற்றும் ஜின்களில் இருக்கும் ஷய்தான் மற்றும் அவனது படையினர்கள் பற்றி எச்சரிக்கயாக இருங்கள். மேலும், மலக்குமார்கள், ரசூல்மார்கள், முஃமின்கள் போன்றோருடன் இருப்பீராக.
அல்லாஹ் கூறுகிறான்:
وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا
"மேலும், எவர்கள்அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடகின்றார்களோ அவர்கள் - நபிமார்கள், சத்தியவான்கள் (உண்மையாளர்கள்), (அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த) ஷஹீதுகள், நல்லடியார்கள் ஆகியோர்களிலிருந்து எவர்கள் மீது அல்லாஹ் அருள் செய்திருக்கிறானோ அத்தகையோருடன் (சுவனத்தில்) இருப்பார்கள். தோழமைக்கு, இவர்கள் அழகானவர்கள்" (4:69)
மேலும், மனிதர்களில் சிலர் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தங்களின் வீடுகளை தொலைக்காட்சி பெட்டி, வானொலி பெட்டி போன்றவற்றைக்கொண்டு அலங்கரிப்பதுதான் என்றும் கருது கின்றனர். அவற்றை உன்னிப்புடன் கேட்டு நேரத்தைக் கடத்துகின்றனர். நல்லவற்றைவிட கெட்ட விஷயங்களை அதிகம் கேட்கின்றனர் அல்லது அறவே நல்லவற்றை கேட்பதில்லை, பார்ப்பதில்லை. அவர்கள் பார்ப்பதும் கேட்பதும் கெட்டவைகளாகவே உள்ளன.
அவர்கள் இவற்றை மகிழ்ச்சியான வாழ்கையின் ஒரு பகுதி என கருதுகின்றனர். மாறாக, இது அழிவையும் பாழ்பட்டு போவதையும் குறிக்கின்றது, அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. வழிகேடின்ப்பக்கம் அழைப்போர் இதுபோன்ற வழிகளின் மூலம் முஸ்லிம்கள் மீது படையெடுகின்றனர்.
ஆக, நம்முடைய வாழ்க்கை கேடும் துர்ப்பாக்கியம் நிறைந்ததாக ஆகிவிடாமல் பார்த்து எச்சரிக்கையாக இருப்பது நம் மீது கடமை. ஏனெனில், இவைகள் மகிழ்ச்சியான வாழ்கையை துர்பாக்கியமான வாழ்வாகவும் நல்லவற்றை தீயவையாகவும் புரட்டிவிடும்.
இதைதான் ஷய்தானும் அவனுடய உதவியாளர்களும் விரும்புகின் றனர்.
இக்காரியங்கள் பற்றி நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், நாம் அல்லாஹ்வை நினைவு கூருவதைக்கொண்டு நம்முடைய நேரங்களை செலவழிக்க வேண்டும். நம்முடைய வீடுகளை அல்லாஹ்விற்கு கீழ்படிந்து நடப்பதைக்கொண்டு கட்டமைக்கவேண் டும். நம்முடைய பெண்கள் மற்றும் சந்ததியினரை அல்லாஹ்விற்கு கீழ்படிந்து நடப்போராக நாம் உருவாக்க வேண்டும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
"முஃமீன்களே (விசுவாசிகளே)! நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் (நரக) நெருப்பைவிட்டும் கப்பாற்றிக்கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமாகும்; அதில் (குணத்தால்) கடின சித்தமுடைய (தோற்றத்தாலும், அமைப்பாலும்) பலசாலிகளான மலக்குகள் உள்ளனர்; அல்லாஹ்விற்கு _ அவன் அவர்களை ஏவிய வற்றில் அவர்கள் மாறுசெய்யமாட்டார்கள். (இரட்சகனிடமிருந்து) அவர்களுக்குக் கட்டளையிடப்படுவதைச் செய்வார்கள்" (66:6)
ஆகவே, உங்களுடைய வீட்டை நேராக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இருப்பிடங்களை (தொலைக்காட்சி, வானொலி) இதுபோன்ற மிகுந்த தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும் நரக நெருப்பின்ப்பக்கம் அழைக்கக்கூடிய சாதனங்களை விட்டு சுத்தமாக வையுங்கள்.
ஷய்தானும் அவனுடைய தோழர்களும் நரகத்தின்ப்பக்கம் அழைக்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ ஜன்னத்தின்ப்பக்கம் அழைக்கின்றான்.
أُولَٰئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ ۖ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ
" அவர்கள் நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன உத்தரவு கொண்டு சொர்க்கத்தின்பாலும், (தன்னுடைய) மன்னிப்பின்பாலும் (உங்களை) அழைக்கின்றான்" (2:221)
அவர்கள் தங்களது செயல்கள் வழியாகவும் பொதுப் பிரச்சாரத்தின் மூலமாகவும் நரகத்தின்ப்பக்கம் அழைக்கின்றனர். மகத்துவமிக்க அல்லாஹ்வோ ஜன்னத்தின்ப்பக்கம் அழைக்கின்றான். யாருடன் நீங்கள் செல்வீர் ?
காஃபிர்கள் மற்றும் ஷய்தான்களின் அழைப்பின்ப்பக்கமா ? அல்லது மகத்துவமிக்கவனும் பரிசுத்தமானவனுமாகிய அல்லாஹ்வின் அழைப்பின்ப்பக்கமா? நீங்களே தேர்வு செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் அறிவுள்ள ஒருவர் என்று உறுதியாக கூறுகிறீர்கள் என்றால், நீங்கள் சிந்திக்கக்கூடியவர் என்றால், அழகான இயற்க்கை பண்புகள் உடையவராக இருந்தால், நீங்களே பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் அழைப்பிற்கு பதில் அளிக்கின்றீரா? அல்லது ஷய்தானின் அழைப்பிற்கு பதில் அளிக்கின்றீரா ?
திரையரங்குகள், நடன விடுதிகள் போன்ற தீய இடங்களுக்கு செல்கின்றீர்களா ? அல்லது மஸ்ஜிதுகள், அல்லாஹ்வின் வீடுகள் போன்றவற்றிற்கு செல்கின்றீர்களா? நீங்களே பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள், முஸ்லிம்களே! மறுமை நாளிலே, உங்களுடைய செயல்களின் ஏடு (புத்தகம்) உங்களிடம் கொடுக்கப்படும். அது இந்த துன்யாவின் வாழ்வில் உள்ள அனைத்து நன்மைகளையும் தீமைகளையும் உள்ளடக்கி இருக்கும் (அதில் எழுதபட்டிருக்கும்).
وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا مَّنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا
"மேலும், ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (தினசரிக்)குறிப்பை அவனுடைய கழுத்தில் அவனுக்கு நாம் மாட்டி இருக்கின்றோம்; மறுமை நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தையும் வெளிப்படுத்துவோம்; அவன் அதனை விரிக்கப்ட்டதாகப் பெற்றுக்கொள்வான்.
"உன்னுடைய புத்தகத்தை நீயே படித்துப் பார்; இன்றையதினம் உனக்கு (எதிராக) நீயே கணக்குப்பார்ப்பவனாக இருக்க போதுமானவன்" (என்று அவனிடம் கூறப்படும்).
எவர் நேர்வழியில் செல்கின்றாரோ, அவர் நேர் வழியில் செல்வதெல்லாம் தனது நன்மைக்காகவேதான்; எவர் வழிகேட்டில் செல்கின்றாரோ அவர் வழி கெடுவதெல்லாம் தனக்கேதான் (தனக்கே தீங்கிழைத்துக் கொள்ளத்தான்); இன்னும், (பாவத்தைச்) சுமக்கக்கூடிய ஒரு ஆத்மாவானது மற்றொன்றின் (பாவச்) சுமையைச் சுமக்காது; மேலும், (நம்முடைய) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்பவர்களாக இல்லை" (17:13)
நிச்சயமாக அல்லாஹ் ரசூலை அனுப்பியுள்ளான், கிதாபை இறக்கியருளியுள்ளான், தெளிவான எத்திவைப்பாக எத்திவைதான். இவை நமக்கு ஆதாரங்களாக நிற்கின்றன. நம் செயல்களை நாம் உற்று நோக்கவேண்டும் அல்லாஹ்வின் அடியார்களே!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَوَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ ۚ أُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ لَا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ ۚ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ
لَوْ أَنزَلْنَا هَٰذَا الْقُرْآنَ عَلَىٰ جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِ ۚ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
" விசுவாசங்கொண்டோரே (முஃமின்களே!) அல்லாஹ்வை நீங்கள் பயந்துக்கொள்ளுங்கள்; ஒவ்வொரு ஆத்மாவும் (மறுமை) நாளைக்காக தான் எதனை முற்படுத்தியிருக்கிறது என்பதைப் பார்க்கட்டும்; இன்னும், அல்லாஹ்வை நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்) மறந்து விட்டார்களே அத்தகையவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்; ஏனென்றால், (அல்லாஹ்வாகிய) அவன் அவர்கள் தங்களையே மறக்குமாறு செய்துவிட்டான் (நல் அமல்கள் செய்ய மறந்துவிடுமாறு செய்துவிட்டான்); அத்தகையோர்தாம் ஃபாசிகீன்கள் (பாவிகள், அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் வெளியேறியவர்கள்)
நரகவாசிகளும், சொர்க்கவாசிகளும் சமமாகமாட்டார்கள்; சொர்க்கவாசிகள் _ அவர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
(நபியே!) இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கிவைத்திருந்தால், அல்லாஹ்வின் பயத்தால் பணிந்ததாக, பிளந்து விடக்கூடியதாக அதை நிச்சயமாக நீர் கண்டிருப்பீர்; மேலும், இந்த உதாரணங்களை - அவற்றை மனிதர்கள் சிந்திப்பதற்காகவே அவர்களுக்கு - நாம் கூறுகிறோம்" (59:18-21)
அல்லாஹ்வின் கிதாபுடைய (குர்ஆன் உடைய) நேர்வழியைக்கொண்டு பயன் அடையவும் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களை பின்பற்றுவதின் மூலமும் நாம் பயன் அடையவும் அல்லாஹ்விடம் கேட்கின்றேன். மேலும், அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதன் மூலமும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதன் மூலமும், அவனது தூதரைப் பின்பற்றுவதின் ஊடாகவும் நமது வாழ்க்கையை நல்லதாகவும் மகிழ்ச்சியுடையதா கவும் ஆக்க அல்லாஹ்விடம் கேட்கின்றேன்.
மேலும், துக்ககரமான, கஷ்டத்தையும் நஷ்டத்தையும் தருகின்ற வாழ்வைவிட்டும் அல்லாஹ் என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக.
(ஆமீன் )
No comments:
Post a Comment