வேறொரு ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறான்,
فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِرِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ ۙ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا وَيَزِيدَهُم مِّن فَضْلِهِ ۗ وَاللَّهُ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ "(அல்லாஹ்வின் இல்லங்களான அவ்)வீடுகளில் (வணக்க வழிபாடுகளின்மூலம்) அவை உயர்த்தப்படவும், அவற்றில் அவனது பெயர் கூறப்பட வேண்டுமெனவும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் அவனை (நல்லடியார்கள்) துதி செய்வர் (நினைவு கூறுவர்).
(அவ்வாறு துதி செய்யும்) ஆடவர்கள்- அவர்களை வாணிபமோ, (கொடுப்பினையின் மூலம், கொடுக்கல் வாங்கல் ) விற்பனையோ, அல்லாஹ்வை நினைவு கூருவதைவிட்டும், தொழுகையை முறையாக நிறை வேற்றுவதைவிட்டும், ஜகாத் கொடுப்பதைவிட்டும் பராமுகமாக்கி விடாது (அலட்சியமியாக இருந்து விடமாட்டார்கள்). இன்னும், ஒருநாளை அவர்கள் பயந்து கொண்டிருப்பர். அதில் (அந்நாளில்) இதயங்களும், பார்வைகளும் (திடுக்கிட்டுத்) தடுமாற்றமடைந்து விடும்.
அவர்கள் செய்து கொண்டிருந்ததற்க்கு மிக அழகானதை அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியாகக் கொடுப்பதற்காகவும், தன் பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகமாக்கவும், (இவ்வாறு தொழுது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்துவருவார்கள்). மேலும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுப்பான்". (24: 36 - 38)
"அவர்களை வாணிபமோ, (கொடுப்பினையின் மூலம், கொடுக்கல் வாங்கல் மூலம்) விற்பனையோ, அல்லாஹ்வை நினைவு கூருவதைவிட்டும் அலட்சியமியாக இருந்துவிட செய்யாது" என்றுதான் அல்லாஹ் கூறிகிறான். அவர்கள் வாணிபம் செய்யமாட்டார்கள் என்றோ இலாபதிற்காக வாங்கி விற்பனை செய்யமாட்டார் கள் என்றோ அல்லாஹ் கூறவில்லை.
ஆக, இவ்வசனம் அவர்கள் (நல் அமல்கள் செய்யக்கூடியவர்கள்) வாணிபம் செய்வார்கள், இலாபம் ஈட்டுவார்கள், விற்பனை செய்வார்கள் என்பதை தெளிவுப்படுத்துகின்றது. அதே சமயம், முஅத்தின் (அதான் சொல்பவர்) தொழுகைக்காக அதான் சொன்னால், அவர்கள் தங்கள் வேலைகளையும் வியாபாரங்களையும் விட்டுவிட்டு, தொழுகையில் கலந்துக்கொள்வார்கள். தொழுகை முடிந்த பிறகு திரும்பவும் ரிஜ்க் (الرزق) தேட செல்வார்கள்.
தற்போது மிக்க துர்பாக்கியமுடைய சிலர், "ஏன் தொழுகை நேரத்தில் கடைகள் அடைக்கப்பட வேண்டும்? ஏன் தொழுகை நேரத்தில் வேலைகள் நிறுத்தப்பட வேண்டும்?" என்று கேட்கின்றனர். இவர்கள் இந்த ஆயத்துக்களை படிப்பதில்லை. ஏனெனில் இந்த ஆயத்துக்களில், தொழுகை நேரம் வந்துவிட்டால் வேலைகளையும் வியாபாரங்களையும் விட்டுவிட்டு, வேலைகளை நிறுத்திவிட்டு தொழுகையில் கலந்துக்கொள்வது கட்டாயமான ஒன்று என்று தெளிவாக உள்ளது. தொழுகை முடிந்து விட்டால் மீண்டும் தங்களது வேலைகளுக்கு சென்றுவிட வேண்டும்.
இந்த துன்யா மற்றும் மறுமையின் நலன்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும்.
فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً"நிச்சயமாக நாம் அவரை (இவ்வுலகில்) நல்ல வாழ்க்கையாகவாழச் செய்வோம்" -- இது அவர்களுக்கு (நன்மை செய்வோருக்கு) இந்த துன்யாவில் கிடைக்கின்ற வெகுமதி.
وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ "இன்னும், அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில் மிக அழகானதை நிச்சயமாக நாம் அவர்களுக்கு கூலியாகவும் கொடுப்போம்" -- இது அவர்களுக்கு மறுமையில் கிடைப்பது.
இந்த துன்யா என்பது அமல்கள் (நற்செயல்கள்) செய்வதற்கான இடம். எவர் இந்த துன்யாவில் அமல் செய்யாமல் இருக்கிறாரோ, அவர் மறுமையில் நற்கூலியைப் பெறமாட்டார். எவர் ஒருவர் இந்த துன்யாவில் ஸாலிஹான அமல்கள் செய்வாரோ, அவர் மறுமையில் நற்கூலியை அடைந்துக்கொள்வார். அவருக்கு அல்லாஹ் இந்த துன்யாவின் நலன் மற்றும் மறுமையின் நலன்களை சேர்த்து தந்துள்ளான். இவர்கள்தான்,
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இரட்சகனே! இம்மையில் நல்லதையும்,. மறுமையில் நல்லதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! இன்னும் நரக நெருப்பின் வேதைனையிலிருந்து காத்தருள்வாயாக"
என்று கூறுவோர் ஆவர். இவர்கள்தான் உண்மையில் மகிழ்ச்சியானவர்கள்.
No comments:
Post a Comment