Sunday, May 25, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 6

 இந்த வகுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பிரிவினராவர். இவர்கள்தான் இந்த துன்யாவின் உண்மையான மதிப்பை அறிந்தோர். 
மேலும், இவர்கள் இந்த துன்யா என்பது ஒரு பாதைதான் என்றும் இது மறுமைக்கான விளை நிலம் என்றும் இது மறுமைக்கு தயார் செய்துக்கொள்ள வேண்டிய இடம் என்பதையும் அறிந்திருக்கின்றனர். ஆக, இந்த துன்யாவை அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதற்க்காக பயன்படுத்துவார்கள்.  

ஒரு கவிஞர் சொன்னார் :

إن لله عباداً فُطنا طلقوا الدنيا وخافوا الفتنا
نظروا فيها فلما راوها لُجةً جعلوا صالح الأعمالِ فيها سفنا

"அல்லாஹ்விற்கே உரிய புத்திசாலியான / உற்று நோக்கக்கூடிய அடியார்கள் இருக்கிறார்கள்

அவர்கள் துன்யவை விலக்கி விட்டு (உலகத்தின் மீதுள்ள பற்றை விட்டுவிட்டு)

அதன் குழப்பங்களுக்கு பயந்து எச்சரிக்கையாக இருக்கிறார்கள்

அதனை (துன்யாவை) உற்று நோக்கினார்கள்

அது ஆழம் தெரியாத நீர்நிலை என்பதை பார்த்தார்கள் 

ஸாலிஹான அமல்களை கப்பலாக்கினார்கள் (அதனை கடந்து செல்ல) "


இதுதான் இந்த உலகம் (துன்யாவின் உண்மை நிலை).

நபி [ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்கள் கூறினார்கள், 

مالي وللدنيا إنما مثَلي ومثل الدنيا كمثلِ راكبٍ تحت ظلِ دوحة
جلس تحت شجرة يستظل ويستريح وسط النهار ثم ذهب وتركها

"எனக்கும் இந்த துன்யாவிற்கும் என்ன இருக்கின்றது? எனக்கும் இந்த துன்யாவிற்கும் இருக்கும் உதாரணம் பெரிய மரத்தின் நிழலின் கீழ்  இருக்கும் ஒரு பிரயாணியை போன்றது" அதாவது, சிறுதூக்கம் தூங்கும் நேரம். "அவர் நண்பகலில் மரத்தின் கீழ் அமர்ந்து நிழல்தேடி பிறகு இளைப்பாறி அதன்பிறகு அதனை விட்டு விட்டு சென்றுவிடுகிறார்"   

ஆக, இந்த துன்யாவும் இதுபோன்றுதான். நிலையான இடம் அல்ல. (நிரந்தரமாக தங்கும் இடம் அல்ல)

ஃபிரவ்னுடைய சமூகத்தில் முஃமீனாக இருந்த ஒருவர் தன்னுடைய சமூகத்தாரிடம் கூறியதை மகத்துவமிக்கவனும் உயர்ந்தோனுமான அல்லாஹ் நமக்கு சொல்கிறான்,"

 يَا قَوْمِ إِنَّمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعٌ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ
 مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزَىٰ إِلَّا مِثْلَهَا ۖ وَمَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ
 
"என்னுடைய சமூகத்தாரே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் (அழிந்து விடும்) இன்பந்தான்; நிச்சயமாக மறுமையோ_ அதுதான் நிலையான (இன்பந்தரும்) வீடாகும்.

எவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ, அவர் அதைப்போன்றதையே தவிர (அதற்கதிமாய்) கூலியாகக் கொடுக்கப்படமாட்டார்; இன்னும், எவர் ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் அவர் முஃமினாக இருக்கும் நிலையில், நல்ல செயலைச் செய்தாரோ அத்தகையவர்கள் சுவனபதியில் நுழைந்துவிடுவார்கள்; அதில் கணக்கின்றியே (அனைத்து அருட்கொடைகளிலிருந்தும்) அவர்கள் கொடுக்கப்படுவார்கள்"                    
(40:39-40)

நல் அமல்கள் (செயல்கள்) செய்யக்கூடிய இவர்கள்தான் மகிழ்ச்சியடைந்தோர். அமலுஸ் ஸாலிஹ்-நற்ச்செயல்களுக்கான இடம் இந்த துன்யாதான். ஆகிரத்தில் (மறுமையில்) அமல் என்பது இல்லை (அமல் செய்ய முடியாது) கூலி மட்டும்தான். 

இதனால்தான் காஃபிர்கள் நரகத்தில் நுழைந்த பிறகு இந்த துன்யாவிற்க்கு (உலக வாழ்க்கைக்கு) திரும்பிச்சென்று ஸாலிஹான அமல்கள் செய்ய விரும்புவார்கள். அவர்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது   

 قَالَ رَبِّ ارْجِعُونِ
 لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ                

"என் இரட்சகனே! என்னை (உலகத்திற்கு)த் திருப்பி அனுப்பிவிடுவாயாக!" என்று கூறுவான்.

"உலகில் நான் விட்டுவந்ததில், (இனி) நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்)"       
(23:99-100)

அவர்கள் உண்மையை காணும்பொழுது, கண்ணுக்கெதிரில் உறுதியாக பார்க்கும்போது தாங்கள் நஷ்டமடைந்தோர் என்பதை தெரிந்துக்கொள்வார்கள். இந்த துன்யாவிர்க்கு திரும்பிச்செல்ல விரும்புவார்கள். ஆனால், அது இயலாத ஒன்று. அமல் செய்வதற்கான தலம் இந்த துன்யாதான்.  

இந்த உலக வாழ்க்கை உங்களை விட்டு செல்கின்றது, ஆனாலும், அதில் நீங்கள் அமல்கள் செய்யாமல் அதை தவற விடுகின்றீர்கள் பிறகு மறுமையையும் தவற விடுகிறீர்கள். அதன்பிறகு இந்த உலகிலும் மறுமையிலும் நஷ்டமடைந்தோராக ஆகிவிடுகிறீர்கள். இதுதான் தெளிவான நஷ்டமாகும். 

No comments:

Allah Guides Whomsoever He Wills....

Assalaamu Alaikum...

There is none to misguide a person whom Allah guided...

There is none to guide a person whom Allah misguided (due to a disease in his heart)....

May Allah Guide us.....

For Comments and Corrections...

thoobaah@gmail.com