லா இலாஹா இல்லல்லாஹ் என்று சாட்சி சொல்வதின் அர்த்தம்
- அமல்களை (இபாதத்துகளை) அல்லாஹ்வுக்காக மட்டுமே கலப்பற்றதாக்கிக் கொண்டு அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் தங்கள் இபாதத்தை (வணக்கங்களை) செலுத்தாமலும் இருப்பதாகும்.
- அமல்களை (இபாதத்துகளை) அல்லாஹ்வுக்காக மட்டுமே கலப்பற்றதாக்கிக் கொண்டு அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் தங்கள் இபாதத்தை (வணக்கங்களை) செலுத்தாமலும் இருப்பதாகும்.
முஹம்மதன் ரசூலுல்லாஹ் என்ற சாட்சியத்தின் அர்த்தம் - முஹம்மத் [ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்] அவர்கள் கொண்டுவந்த (தூதுச்)செய்தியை ஏற்று அதில் கண்குளிர்ச்சி அடைந்து, அவர் ஏவியவற்றிக்கு கீழ்ப்படிந்து நடந்து, அவர் தடுத்தவற்றை முற்றிலும் விட்டுவிடுவதாகும்.
இவ்விரண்டு நிபந்தனைகளையும் அல்லாஹ் தன்னுடைய வார்த்தையான அல்-குர்ஆனிலே பின்வருமாறு ஒன்று சேர்த்து கூறியுள்ளான்:
بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِندَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
"ஆம்! எவர் தன் முகத்தை (தன்னை) அல்லாஹ்வுக்கு கீழ்படியச்செய்கிறாரோ (ஒப்படைக்கிறாரோ) - அவர் நன்மை செய்துக்கொண்டிருக்கிற நிலையில்- அவருடைய நற்கூலி அவருடைய இரட்சகனிடம் அவருக்குண்டு. (இதைக்கையோர்) அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்"
(2:112)
"எவர் தன் முகத்தை (தன்னை) அல்லாஹ்வுக்கு ஒப்படைக் கிறாரோ (கீழ்படியச்செய்கிறாரோ)" - இது இக்லாஸை குறிக்கின்றது (வணக்கங்களை அல்லாஹ்விற்காக மட்டுமே செய்வது).
"நன்மை செய்துகொண்டிருக்கிறார்" - இது ரசூல் [ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்] அவர்களை பின்பற்றுவதைக் குறிக்கின்றது.
ஒரு அமல் (நற்செயல்) ரசூல் [ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்] அவர்களின் சுன்னத்தை (வழிகாட்டளை) ஒத்து இருக்கின்றது. ஆனால், அது இக்லாஸோடு இல்லை (அல்லாஹ்வுக்காக மட்டுமே கலப்பற்றதாக்கி அந்த அமல் செய்யப்படவில்லை). அது நிராகரிக்கப்படும்.
அதே போன்று ஒரு அமல் இக்லாஸோடு (அல்லாஹ்வுக்காக மட்டுமே கலப்பற்றதாக்கி) செய்யப்படுகின்றது. ஆனால், அது ரசூல் [ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்] அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமாக இருக்குமேயானால் இதுவும் (அல்லாஹ்வால்) நிராகரி க்கப்படும்.
அதனால்தான் மகத்துவமிக்கவனும் உயர்ந்தோனுமா ன அல்லாஹ் கூறுகிறான்:
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
(67:2)
உங்களில் அதிகமாக அமல்கள் செய்பவர்கள் யார் என்று கூறாமல் அல்லாஹ் கூறுகிறான்: "உங்களில் செயலால் மிக்க அழகானவர் யார்". அதவாது அழகாகஅமல் செய்பவர்கள் யார் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஏனெனில், அமல்கள் அதிகமாக இருப்பதைவிட அமல்கள் அழகாக, சரியாக இருப்பதுதான் முக்கியம்.
"உங்களில் செயலால் மிக்க அழகானவர் யார்"-
إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا
"அவர்களில் யார் செயலால் அழகானவர்கள் என்று அவர்களை நாம் சோதிப்பதற்காக, பூமியின் மீதிருப்பவற்றை அதற்க்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கினோம்"
(18:7)
உங்களில் அதிகமாக அமல்கள் செய்பவர்கள் யார் என்று அல்லாஹ் கூறவில்லை. ஏனெனில், அதிகமான அமல்கள் என்பது அழகாக, சரியாக இல்லையெனில் அவை நிராகரிக்கப்படும்.
"உங்களில் செயலால் மிக்க அழகானவர் யார்"- (الفضيل ابن عياض)ஃபுதைல் இப்னு இயாத் (رحمه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது, " அபு அலீ (ஃபுதைல்) அவர்களே, 'உங்களில் செயலால் மிக்க அழகானவர் யார்' என்கிற அல்-குர்ஆன் வசனத்தின் அர்த்தம் என்ன ?" அவர் சொன்னார், "கலப்பற்றது (இக்லாஸுடன் இருக்கக் கூடியது) மற்றும் சரியானது", "நிச்சயமாக ஒரு அமல் இக்லாஸுடன் இருந்து சரியானதாக இல்லை என்றால் அது (அல்லாஹ்வால்) நிராகரிக்கப்படும். மேலும், ஒரு அமல் சரியானதாக இருந்து அது இக்லாஸுடன் இல்லை என்றால் அதுவும் நிராகரிக்கப்படும், அது இக்லாஸுடன் சரியாகவும் இரு க்கும் வரை"
இது அந்த இரண்டு நிபந்தனைகளைக் குறிக்கின்றது.
No comments:
Post a Comment