மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் கூறினார்கள்,
"அல்லாஹ்விடத்தில் இந்த உலகம் ஒரு கொசுவின் இறக்கையின் எடை அளவு மதிப்பு மிக்கதாக இருக்குமேயானால், அல்லாஹ் நிராகரிப்போரை (காஃபிர்களை) ஒரு சிறு துளி தண்ணீர் கூட பருக விடமாட்டான்" (திர்மிதி 2320)
ரசூல்மார்களில்தலைவரும் முத்தகீ ன்களின் (அல்லாஹ்வைப் பற்றி பயபக்தியுடன் இருப்பவர்களின்) வழிகாட்டியுமான நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கடுமையான பசியின் காரணமாக தன் வயிற்றில் கல்லை கட்டிக்கொ ண்டு இருந்திருக்கிறார்கள். மேலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்களின் உடம்பில் அச்சிட்டுவிடும் அளவிற்கு இருக்கும் பாயில் படுத்து உறங்குவார்கள். அல்லாஹ்வின் பாதையில் போராடியிருக்கிறார்கள், யுத்தத்தில் சண்டையிட்டுள்ளார்கள், மிகவும் ஆபத்தான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டார்கள். இவையெல்லாம் அவர்கள் அல்லாஹ்வின் ரசூலாக (தூதராக) இருந்தபோதுதான்.
இந்த உலக வாழ்கையை அவர்கள் வேண்டியிருந்தால், அல்லாஹ் அவர்களுக்கு நிச்சயம் அதை கொடுத்திருப்பான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்களை தாவூத் நபி மற்றும் சுலைமான் நபி போன்று தூதராகவும் அரசனாகவும் ஆக்க அல்லது அரசனாக அல்லாமல் தூதராக மட்டும் ஆக்க அல்லாஹ் வாய்ப்பளித்தப்போது , நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் தான் தூதாரக இருப்பதையே தெரிவுசெய்தார்கள்.
மேலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் சொன்னார்கள், "நான் ஒரு நாள் (உணவு இன்றி) பசித்து இருக்கிறேன் இன்னொரு நாள் வயிறு நிரம்பி இருக்கிறேன்". நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் சிறந்ததை தேர்வுசெய்தார்கள். ஏனெனில், இந்த உலக வாழ்க்கை என்பது அற்பமான இன்பமும், மயக்ககூடியதும்தான்.
(அல்லாஹ் கூறுகிறான்:)
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
"ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை." (57:20)
இந்த உலகத்திலிருந்து மனிதனுக்கு ஏதேனும் கொடுக்கப்ட்டால், அவருடைய வாழ்வு முடிவுக்கு வந்துவிடும், அப்போது அதை (அந்த பொருளை) அவர் விட்டுவிடுவார். அல்லது அது ஒரு முடிவுக்கு வந்துவிடும், அப்போது அது அவரை விட்டுவிடும். (ஆக), அழிந்து விடாத, நல்ல வாழ்க்கை, நிரந்தர வாழ்க்கை என்பது மறுமையின் வாழ்வுதான்.
وَمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ ۚ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
"இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மேலும், அவர்கள் அறிந்தவர்களாக இருப்பின் நிச்சயமாக மறுமையின் வீடு, அதுவே (நித்தியமான) வாழ்க்கையாகும்." (29:64)
மனிதர்களில் இவர்கள் ஒரு சாரார். இவர்கள் இந்த உலக வாழ்கை பற்றியே அதிக கவனம் செலுத்துவார்கள். அது அவர்களை மகிழ்விக்கும், அவர்களை கோபத்துக்குள்ளாக்கும், இந்த துன்யாவிர்க்காக அயராமல் உழைப்பார்கள். மேலும், தங்களது முழு வாழ்வையும் அதனை அடைவதற்க்காக கொடுப்பார்கள். ஆனால், ஆகிரத்தை (மறுமையை) பொறுத்தவரை, அவர்கள் அதனைவிட்டு தூரமாகிவிட்டனர். அல்லது அவர்கள் மறுமையை நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் அதற்காக உழைப்பதற்கு அவர்களிடம் மிகக் குறைந்த ஆர்வமே இருக்கும்.
"ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து வெளிப்படையானதை (மட்டும்) அறிவார்கள்; அவர்களோ மறுமையைப் பற்றி (மறந்தவர்களாகவே) அலட்சியமாக இருக்கிறார்கள்." (30:6-7)
இதுப்பற்றி மிக்க உயர்ந்தோனான அல்லாஹ் கூறுகிறான் :
وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
يَعْلَمُونَ ظَاهِرًا مِّنَ الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ
"ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து வெளிப்படையானதை (மட்டும்) அறிவார்கள்; அவர்களோ
No comments:
Post a Comment