மனிதர்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேட வேண்டாம் என்றோ அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றை உட்கொள்ள வேண்டாம் என்றோ நாம் கூறவில்லை.
மகத்துவமிக்க அல்லாஹ் கூறுகிறான் :
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ ۚ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ ۗ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
" உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (நபியே!) “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (சகலவித) அலங்காரத்தையும், உணவு வகைகளில் நல்லவற்றையும், (ஆகாதவை என்று) தடுத்தது யார்?” என்று கேட்பீராக. “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (உரியதாகும், எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) பிரத்தியேகமானதாகும்” என்று கூறுவீராக! அறியக்கூடிய சமூகத்தார்க்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்." (7: 31-32)
ஆக, மனிதன் அளவுமீராமல், ஹலாலான (அனுமதிக்கபட்ட) ஜீவனத்தை (வாழ்வாதாரத்தை) தேடுவதிலோ, அல் லாஹ் அளித்தவற்றிலிருந்து அவர் இன்பம் காண்பதிலோ எந்த தவறுமில்லை. மேலும், அல்லாஹ்விற்கு கீழ்படிவதற்க்கு உதவியாக இவற்றை பயன்படுத்திகொள் வது மேன்மையானது. (இவ்வாறு செய்வதன் மூலம்) அவருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளவையை வைத்து அல்லாஹ்விற்கு கீழ்படிவதற்கு (அல்லாஹ்விடம்) உதவி தேடுகிறார். இந்த துன்யா என்பது (உலக வாழ்க்கை) மறுமைக்கான விளை நிலம். இது மறுமைக்கு தயார் செய்துக்கொள்ள வேண்டிய இடம்.
நிந்திக்கப்பட்டவருக்கு (தவறில் உள்ளவருக்கு) தான் இந்த துன்யா பெரும் கவலை அளிக்ககூடியதாக (அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ) இருக்கும். இந்த துன்யாவை நோக்கியே அவருடைய பார்வை இருக்கும் (அவர் இந்த துன்யாவை தவிர வேறெதையும் பார்க்கமாட்டார்). அதுபோன்று, இந்த வகையை சேர்ந்த மனிதர்கள் ஹலாலான ஹாராமான காரியங்கள் பற்றி கவலைப்படமாட்டார்கள்.
தனது பொருட்களை (செல்வங்களை) எங்கிருந்து பெறுகிறார், தான் சம்பாதிப்பது ஹலாலான மூலதனத்திலிருந்தா அல்லது ஹராமான மூலதனத்திலிருந்தா என்று அவர் கண்டுகொள்ளமாட்டார். இவர் இந்த துன்யாவின் தோழராக இருக்கிறார்.
இதனால்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் சொன்னார்கள், "
"பணம், ஆடம்பரமான பொருட்களின் அடிமைக்கு கேடுதான்,அவனுக்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைவான், அவனுக்கு கொடுக்கப்படவில்லை என்றால் ஆத்திரமடைவான் (அதிர்ப்தியடைவான்)"
ஆக, இவர் இந்த துன்யாவை தேடிபெறக்கூடிய ஒன்றாக ஆக்கிக்கொண்டார், அதிக கவனம் செலுத்தவேண்டிய ஒன்றாக ஆக்கிக்கொண்டார். அவருடைய எண்ணம் எப்படி இருக்கிறது என்றால், மகிழ்ச்சி என்பது இந்த துன்யாவை அடைவதில்தான் என்றிருக்கிறது. ஒரு கவிஞர் சொன்னார்,
"செல்வங்களை சேற்பதுதான் மகிழ்ச்சியென்று நீ உறுதியாக நம்புகிறாய்;
ஆனால் (உண்மையில்) தகீ தான் (தக்வா உடையவர்தான்) மகிழ்ச்சியடைந்தவர்;
அல்லாஹ்வைப்பற்றி தக்வாவோடு இருப்பதுதான் சேர்த்துவைப்பவற்றில் சிறந்தது;
அல்லாஹ்வினிடத்தில் தக்வா உடையோருக்கு இருப்பது இன்னும் அதிகமானது"
இவர்கள் மனிதர்களில் ஒரு வகையினர்.
No comments:
Post a Comment