அரபு உரை : Shaykh Saalih ibnu Fawzaan ibnu Abdullaah al-Fawzaan
பிஸ்மில்லாஹி அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
சவூதி அரபியாவின் மூத்த மார்க்க அறிஞர்களில் ஒருவர்.
---------------------------------------------------------------
பிஸ்மில்லாஹி அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
ஸலவாத்தும் சலாமும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் சஹாபாக்களின் மீதும் நிலவட்டுமாக.
இந்த உரையின் தலைப்பு "மகிழ்ச்சியான வாழ்க்கை" அல்லது "நல்ல வாழ்க்கை" என்பதாகும்.
முதலாம் வகையினர்
ஒவ்வொரு மனிதரும் மகிழ்ச்சியான நலன்கள் நிறைந்த வாழ்க்கையைத்தான் நாடுகிறார் / விரும்புகிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், அதனை அடைவதற்கான வழிமுறைகள் மற்றும் அதை பெறுவதற்க்கு செய்யவேண்டிய காரியங்களைப் பொறுத்தவரை, அவை மனிதர்களிடையே வேறுபடுகின்றன.
மனிதர்களில் ஒருசிலர் மகிழ்ச்சியான நல்ல வாழ்க்கையை அடைவதென்பது
உலக வாழ்க்கையிலுள்ள இச்சைகளை பின்பற்றுவதன் மூலம்தான் என்று நினைக்கின்றனர். இந்த உலக வாழ்க்கையின் சிற்றின்பத்தை பின்பற்றுவதினால் தான் விரும்புவது தனக்கு கிடைக்கும் என்றும் எண்ணுகின்றனர். இதுதான் மகிழ்ச்சியான நல்ல வாழ்க்கை என்றும் கருதுகின்றனர்.
மனிதர்களில் ஒருசிலர் மகிழ்ச்சியான நல்ல வாழ்க்கையை அடைவதென்பது
உலக வாழ்க்கையிலுள்ள இச்சைகளை பின்பற்றுவதன் மூலம்தான் என்று நினைக்கின்றனர். இந்த உலக வாழ்க்கையின் சிற்றின்பத்தை பின்பற்றுவதினால் தான் விரும்புவது தனக்கு கிடைக்கும் என்றும் எண்ணுகின்றனர். இதுதான் மகிழ்ச்சியான நல்ல வாழ்க்கை என்றும் கருதுகின்றனர்.
அல்லாஹ் கூறுகிறான் :
فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ
"மனிதர்களில் சிலர், “எங்கள்இரட்சகனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடுவாயாக” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை (2:200)
மேலும் கூறுகிறான் :
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ۗ ذَٰلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَاللَّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَٰلِكُمْ ۚ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ
"பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான சேர்த்துவைக்கப்பட்ட பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் (வேளாண்மை) ஆகிய (மனதுக்கு) ஆசையூட்டப் பட்டவகைகளை நேசிப்பது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது;
இவை(யெல்லாம் நிலையற்ற) இவ்வுலக வாழ்வின் (அற்ப) இன்பங்களே; அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய திரும்பிச் செல்லுமிடம் உண்டு (சுவர்க்கம் உண்டு).
(நபியே! மனிதர்களிடம்) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றி நான் உங்களுக்குச்அறிவிக்கவா? தக்வா உடையவர்களுக்கு - (அல்லாஹ்வுக்கு) பயந்து நடக்கின்றார்களோ அத்தகயவர்களுக்கு , அவர்களுடைய இரட்சகனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்குவார்கள்;
(அங்கு அவர்களுக்குத்) பரிசுத்தமான துணைகள் (அல்லது மனைவியர்) உண்டு; இன்னும் (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்வின் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக (பார்கின்றன்வனாக) இருக்கின்றான் " (3:14-15)
மேலும் கூறுகிறான் :
فَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ
" இன்னும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே மகிழ்ச்சியடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை " (13:26)
إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَاطْمَأَنُّوا بِهَا وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ أُولَٰئِكَ مَأْوَاهُمُ النَّارُ بِمَا كَانُوا يَكْسِبُونَإِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ يَهْدِيهِمْ رَبُّهُم بِإِيمَانِهِمْ ۖ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِدَعْوَاهُمْ فِيهَا سُبْحَانَكَ اللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ ۚ وَآخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
"நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) எதிர்ப்பார்காமல், இவ்வுலக வாழ்க்கையைப் பொருந்திக்கொண்டு (அதை மிகவும் விரும்பி), இன்னும் அதனைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கியும்) விட்டார்களே அவர்களும், இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் (புறக்கணித்து) விட்டு மறந்தவர்களாக இருக்கின்றனரே அத்தகையோர் - அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அத்தகையோர் - அவர்களுடைய இரட்சகன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் அவர்களுக்கு நேர்வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் (வசிக்கும்) அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
அவற்றில் அவர்களின் பிரார்த்தனையாவது : “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்;
அதில் (ஒருவர் மற்றவருக்கு கூறும்) அவர்களின் முகமன் ஸலாமுன் (சாந்தி உண்டாவதாக) என்பதாகும். இன்னும் “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும் " (10: 7-10)
(இந்த உலகம் தான் எல்லாமே என்று கருதக்கூடிய ) இந்த வகையைசார்ந்த மனிதர்கள் குறுகிய நோக்குடையவர்கள். ஏனெனில், அவர்களின் பார்வை இந்த உலக வாழ்க்கையின் பக்கம் மட்டுமே சுருங்கிவிட்டது. மேலும், இந்த உலகத்தில் உள்ள இச்சைகள் சிற்றின்பங்கள் போன்றவைகள்தான் மகிழ்ச்சியான நல்ல வாழ்க்கைக்கு முக்கியமானவை என்றும் எண்ணுகின்றனர்.
இந்த உலக வாழ்க்கை தனது கவர்ச்சிகளால் அவர்களை மயக்கிவிடுகின்றது. அவர்களின் முயற்சிகளை எல்லாம் இந்த துன்யாவின் பக்கம் மட்டுமே நிறுத்திவிடுகின்றது (கட்டுப்படுத்திவிடுகின்றது). ஏனெனில், அவர்கள் மறுமையைப் பற்றி (ஈமான் கொள்ளாமல்) நம்பிக்கொள்ளாமல் இருப்பார்கள் அல்லது அவர்கள் மறுமையைப் பற்றி நம்பிக்கை கொண்டிருந்தாலும் இவ்வுலக வாழ்க்கை அவர்களை அதன் வேளைகளில் மூழ்க வைத்து விடுக்கின்றது.
இதன் முடிவு என்னவெனில், அவர்களுக்கு நஷ்டமும் அவர்களது வாழ்க்கை பரிதாபகரமான துயரமான ஒன்றாக ஆவதே ஆகும். அவர்களுக்கு எவ்வளவு செல்வங்கள், சிற்றின்பங்கள், சந்தோஷங்கள் கொடுக்கப்பட்டாலும் அவர்களின் நிலை துக்ககரமான ஒன்றாகத்தான் இருக்கும்.
இது அல்லாஹ்விடம் இருந்து வருகின்ற தண்டனையாகும். மேலும், இது சொற்பமான இன்பத்திற்கு பிறகு வருகின்ற நீடிக்கின்ற துயரமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
فَلَا تُعْجِبْكَ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُعَذِّبَهُم بِهَا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَتَزْهَقَ أَنفُسُهُمْ وَهُمْ كَافِرُونَ
" ஆகவே, அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் தான் " (9:55)
மேலும் கூறுகிறான் :
أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِ مِن مَّالٍ وَبَنِينَ نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ ۚ بَل لَّا يَشْعُرُونَ
" அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?(அவ்வாறு நாம் செய்வதால்) அவர்களுக்கு நன்மையானவற்றை நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை " (23:55-56)
இந்த துன்யாவை பொருத்தவரை, அல்லாஹ் தான் விரும்புவோருக்கும் தான் விரும்பாதவர்களுக்கும் கொடுக்கின்றான். ஸஹீஹான ஹதீதில் இவ்வாறு வருகின்றது: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் கூறினார்கள்,
" அல்லாஹ் இந்த துன்யாவை (இந்த துன்யாவிலிருந்து) தான் விரும்புவோருக்கும் தான் விரும்பாதவர்களுக்கும் கொடுக்கின்றான், ஆனால் தான் விரும்புவோருக்கு மட்டுமே தீனை (மார்க்கத்தை) கொடுக்கின்றான் "
No comments:
Post a Comment