Sunday, May 25, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 4

==> இரண்டாம் வகையினர்

இரண்டாவது பிரிவினர் இந்த துன்யாவில் உள்ள நல்லதையும் மறுமையில் உள்ள நல்லதையும் தேடுகின்றனர். இவர்கள் தங்களின் துஆக்களில் (பிரார்த்தனைகளில்) மறுமையைப்பற்றி மட்டும் துஆ செய்துவிட்டு நிறுத்திக்கொள்ளாமல், இந்த துன்யா மற்றும் மறுமையின் நலன்களையும் நாடுவர். 


وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள்இரட்சகனே !) இவ்வுலகில் நல்லதையும் மறுமையில் நல்லதையும் எங்களுக்கு  தந்தருள்வாயாக; இன்னும் எங்களை நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கூறுவோரும் அவர்களில் இருக்கின்றனர் " (2:201)

அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கும் துஆக்களில் இம்மை மற்றும் மறுமை நலன்களை சேர்த்து வேண்டுவார்கள். இவர்கள்தான் மகிழ்ச்சியான கூட்டத்தினர். அல்லாஹ் கூறுகிறான்,

 مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக (நம்பிக்கையாளராக) இருந்து யார் நற்செயல்களைச் செய்வாரோ , நிச்சயமாக நாம் அவரை (இவ்வுலகில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம்; இன்னும், நிச்சயமாக, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு நிகராக மிகவும் அழகான கூலியை நாம் கொடுப்போம். (16:97)


(அல்லாஹ் கூறுகிறான்:) " யார் நற்செயல்களைச் செய்வாரோ" , நற்செயல் - இதில் இரண்டு நிபந்தனைகள் சேர்ந்துள்ளது .

முதல் நிபந்தனை: இக்லாஸ் (இபாதத்துகளை - வணக்கங்களை அல்லாஹ்விற்காக மட்டுமே செய்வது)

அதில் எந்தவித ஷிர்க்கும் ( இணைவைத்தலும்) இருக்க கூடாது, அது ஷிர்க்கின் வகையில் பெரியதோ அல்லது சிறியதோ. அதில் (இபாதத்துகளில்) ஷிர்க் ஏற்படுமெனில் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். மேலும், அந்த அமல் மறுக்கப்பட்டு யாரை அல்லாஹ்விற்கு இணையாக ஆக்கப்பட்டதோ அவரிடமே அது திருப்பிவிடப்படும் (ஒரு மனிதர் யாருக்காக அந்த அமலை செய்தாரோ அவரிடமே அது திருப்பிவிடப்படும்). 

ஹதீஸ் குத்ஸியின் ஒரு ஹதீஸில் இவ்வாறு வருகிறது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் சொன்னார்கள், "அல்லாஹ்(جلٌ وعلا) கூறினான்,' எனக்கு இணையாக ஆக்கப்படும் இணை துணைகளை விட்டும் நான் தேவையற்றவன். எவர் ஒருவர் எனக்கு ஒன்றை (அல்லது ஒருவரை) இணையாக்கி ஒரு அமலை செய்வாரோ அவரையும் அவருடைய ஷிர்கையும் (இணைவைத்தளையும்) நான் விட்டுவிடுவேன்'. இன்னோர் அறிவிப்பில் வருகின்றது, "அவர் (அல்லாஹ்வுக்கு            இணைவைத்தவர்) இணையாக்கியவற்றிற்கே சொந்தமானவர். அவரைவிட்டு நான் நீங்கிவிட்டேன்'

இது முதலாம் நிபந்தனை-- மகத்துவமிக்க அல்லாஹ்விடத்தில் இக்லாஸோடு இருப்பது. இக்லாஸ் (இபாதத்துகளை - வணக்கங்களை அல்லாஹ்விற்காக மட்டுமே செய்வது).


இரண்டாவது நிபந்தனை: ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்)  அவர்களை பின்பற்றுதல் (இத்திபா) 
அதில் எந்த பித்'அத்துகளோ (بدعة)(மார்க்கத்தில் இல்லாத புதியவைகள்) மற்றும் மூட நம்பிக்கைகளோ இருக்கக்கூடாது. மாறாக, ஒரு செயல் அமல் ஸாலிஹ் ஆக (நல்ல செயலாக) அது ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்களின் சுன்னத்தை (வழிகாட்டளை) ஒத்து இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்த செயல் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்களின் சுன்னத்திற்கு மாறாக இருக்குமேயானால், அது அழிந்துபோகக்கூடிய, நிராகரிக்கப்பட்ட ஒரு அமலாகத்தான் இருக்கும். 

 ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் கூறினார்கள்,

من أحدث في أمرنا هذا ما ليس منه فهو ردٌ
" எவர் ஒருவர் நம்முடைய காரியத்தில் - அதில் இல்லாத-  புதிதாக ஒன்றை அறிமுகப் படுத்துகிறாரோ அது நிராகரிக்கபடும்"

"அதில் இல்லாத" -- அதாவது, ஒருவர் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டுபண்ணுகிறார். மேலும், அதை ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்)  அவர்கள் கொண்டுவராத ஒன்று. அவர் அதை ஒரு நன்மையானதாக ஆக்கினாலும் சரி, ஒரு நல்ல காரியமாக கருதினாலும் சரி, அது நன்மையானது அல்ல. மாறாக, அது தீமையானது.

" நம்முடைய காரியத்தில் புதிதாக ஒன்றை அறிமுகப் படுத்துகிறாரோ-- நம்முடைய காரியங்களில் என்பது இந்த இஸ்லாமிய மார்கக்த்தை குறிக்கின்றது.         
 
"அது நிராகரிக்கபடும்" -- அதாவது, அது மறுக்கப்பட்டு அவரிடமே அது திருப்பப்படும்.


இன்னோர் ஹதீஸின் அறிவிப்பில் வருவதாவது,

من عمل عملاً ليس عليه أمرنا فهو ردٌ

" எவர் ஒருவர் நம்முடைய காரியத்தின் அடிப்படையில் அமல் செய்யவில்லையோ அது நிராகரிக்கப்படும்". ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்காவிட்டாலும், அதில் இல்லாத ஒரு அமலை (செயலை) செய்கிறார். (இதுவும் நிராகரிக்கப்படும்)
 
அல்லது வேறொருவர் புதிதாக ஒரு காரியத்தை இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டுவருகிறார், அதனைப் பின்பற்றி இவர் அமல் செய்வாரானால், இதுவும் நிராகரிக்கப்படும்.

ஒருவர் மார்க்கத்தில் (இல்லாத) புதிதாக ஒன்றை உண்டாக்கியதோ அல்லது வேறொருவர் புதிதாக ஏற்படுத்தியதின் அடிச்சுவடை பின்பற்றுவதோ அல்லது அந்த பித் 'அத்தை செய்பவரை ஒரு மரபு வழி தொடராக பின்பற்றுவதோ இது அனைத்தும் நிச்சயமாக மறுக்கப்படும்.

இப்படி புதிதாக ஒருவர் செய்யும் அமல்கள் அவருக்கு எந்த பயனும் அளிக்காது. அவர் அவற்றில் தன்னை எவ்வளவு ஈடுபடுத்திக்கொண்டு செய்தாலும் சரி.

ஆக, இவைகள்தான் அந்த இரண்டு நிபந்தனைகள் - இக்லாஸ் மற்றும் இத்திபா. இவைகள்தான் ஷஹாதத்தின் [அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ் ] என்கிற சாட்சியத்தின் அர்த்தங்களாகும்.  

 வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மத் [ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்] அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்றும் சாட்சிக் கூறுவதின் அர்த்தங்களாகும்.      

No comments:

Allah Guides Whomsoever He Wills....

Assalaamu Alaikum...

There is none to misguide a person whom Allah guided...

There is none to guide a person whom Allah misguided (due to a disease in his heart)....

May Allah Guide us.....

For Comments and Corrections...

thoobaah@gmail.com